Thursday, February 11, 2010

Stalin Poems - ஸ்டாலின் கவிதைகள்

கடல்

கடலில் எழுவது அலை
அதுவே கடலின் கலை
அலை கடலுக்கு ஒரு தலை
பொங்கி எழுந்தால் அது ஒரு மலை .

வரையாது வழங்கும் கடல் ,
அது பல உயிரனங்களின் திடல்
கடலுக்கு அதில் வாழும் உயிரினங்களே உடல்
அது கப்பலின் பெடல்

வெங்காயம்

நான் உன் தோலை அல்லவா உரிக்கின்றேன் , உனக்கல்லவா அழுகை வர வேண்டும்.

அய்யோ பாவம் !

தினமே நீ ஐயோ பாவம் !
இரவு பகல் வந்தால்
ஒரு நாள் கழிகின்றாய் .

மனமே நீ ஐயோ பாவம் !
மனதில் இருக்கும் சுமைகளை வெளிப்படுத்த இயலாமல்
புழுங்கி கிடக்கிறாய் .

பணமே நீ ஐயோ பாவம் !
பெட்டிகளிலும் லாக்கர்களிலும் இருந்து
புழுங்கி கிடக்கிறாய் .

நற்குணமே நீ ஐயோ பாவம் !
சில இடங்களில் உனக்கேது மதிப்பு ?

மௌனமே நீ ஐயோ பாவம் !
உன்னையும் சிலர் சோதிக்கின்றனர் .

ஊனமே நீ ஐயோ பாவம் !
ஊனமாய் பிறந்ததற்கு அல்ல ,
ஊனமாய் நீயே உன்னை நினைப்பதால் .

எறும்பு

உலகிலேயே நீதான் மிகப்பெரிய உளவாளி !
சர்க்கரை எங்கு இருந்தாலும் கண்டுபிடித்து விடுகின்றாய் .

உலகிலேயே நீதான் மிகப்பெரிய புத்திசாலி !
அடுத்த பருவத்திற்கு உரிய உணவை
முன்னதாகவே சேமிக்கின்றாய் .

உலகிலேயே நீதான் மிகப்பெரிய பலசாலி !
உன்னை விட ஐம்பது மடங்கு எடையைச்சுமக்கின்றாய் .

உலகிலேயே நீதான் மிகப்பெரிய துரதிஷ்டசாலி !
கடித்த உடன் உனக்கு சாவு உறுதி .



1 comment: